2/14/2010

இணுவில்

ஸ்ரீ பரராச சேகரப்பிள்ளையார் கோவில்


கரும்பும் இளநீரும் காரேள்ளும் தேனும் விரும்பும் அவல்பலவும் மேன்மேல்அருந்தி குணமுடயனாய் வந்து குற்றங்கள் தீர்க்கும் கணபதியே காப்பு .

விநாயகர் புராணம்
அணுவில் மதத்தை யடக்கி என் நாளும் இணுவில் இலக்கிஜெமை யாளும்குணமணி ஓம் சீரார் பரராசசெகரப்பிள்ளையார் பேரார் பெருமைகளை பேசு ஏரார்இணுவில்வாள் எந்தை கணபதியின் தாரார் திருவடியைத் தாள் பணிவோர் - ராஅமிர்தம் போல் வாழ்வார் அருள் செல்வம் சூழ்வார் தமிழ் உள்ளவரை தளைத்து

இலங்கையில் வடபுலத்தில் கி .பி 12- 17 . ம் நூற்றாண்டு காலத்தில் ஆறியச்
சக்கரவர்த்தி களாகிய தமிழ் மன்னர்கள் அரசாண்டனர் இப் பரம்பரையில்பதினோராவது மன்னனாக அரசாண்டவர் பரராசசேகர மன்னன் இவருடன்
இவர் தம்பி செகராசசேகரனும் பின் ஆட்சி புர்ரிந்தான் என பல சான்றுகள்கூறுகின்றன





பரராசசெகரமன்னன் பல வளங்களும்மலிந்த வனப்புமிக்க நல்லுரை தலைநகராக கொண்டு அரசாண்டான் இவன்வீரமும் நிர்வாக திறமையும் மக்களிடம்அன்பும் கருணையும் ஆத்மீகசிந்தனையும் மிக்கவனாக இருந்ததால்ஆங்காங்கே பல விநாயகர்ஆலயன்களை அமைத்தான் பக்திமேலீட்டினால் வீதி யுலா வரும்போது பல சீரும் சிறப்பும் இயற்கை வனப்பும்கூடிய இணுவில் பகுதியில் இவனை கவர்ந்தது பர ராச சேகரப்பிள்ளையார்கோயிலின் கீழ் திசையில் இரு குளங்கள் காணப்பட்டன தென் திசையில் செந்நெல்லும் கரும்பும் வடபகுதியில் பருத்தியும் கூடுதலாக பயிரிடப் பட்டிருந்தன
இப் பயிர் வகைகளுடன் முக்கனி மரங்களு நறுமணம் கமழும் மலர்செடிகொடிகளும் ,கமுகு ,தென்னை ,முங்கில் ,பனை ஆகியனவும் செழித்துவளர்ந்து இருந்தன (இன்றும் குளக்கரை ,பருத்தியடைப்பு என்ற பெயர்கள் எமதுபேச்சு வழக்கில் பேசப்படுவது இதற்கு சான்றாகும்.)


திருவருள் கைகூ டவும் விநாயகபெருமானின் அமைவிடம் அரசனால் பேருவைகையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டது தெரிவு செய்த இடத்தில்பரராசசெகரமன்னனின் ஆணையில் அவனது பணியாளர்களினால்கட்டுவிக்கப்பட்டதெஇவ் ஆலயம் பொது மக்கள் தமது பக்தி மேலீட்டினால் இறைவழிபாடு செய்யவும் இறைபணி ஆற்றவும் துதிபாடவும் தலைபட்டனர் லயம்புசகர்களால் ஆகம விதிப்படி பூசைகள் செய்து அருள் பொலிவிக்கப்பட்டது பரராசசெகரனால் கட்டப்பட்டதால் இவ் ஆலயம் பரராச சேகரப்பிள்ளையார் கோவில்என்று அழைக்கப்பட்டது பரராசசேகரமன்னன் கோவில் அமைந்தவுடன் தனதுமந்திரி பிரதானிகளுடன் அடிக்கடி வந்து வணங்கினா னெனச் சான்றுகள்கூருகின்றன மன்னன் பிரதானிகளுடன் இங்கு வந்து வணங்கியதால் பெருமைஅடைந்தமக்கள் அதனை குறிக்ககோயிலின் உள்வீதியில் ஓவியமாகவரைந்துள்ளமை இதற்று சான்றாகும் சிங்கைப் பரராசசேகரன் கீ .பி 1475, ஆம்ஆண்டளவில் ஆட்சிக்கு வந்தவனேனவும் இக் கோவிலைக்கட்டிவித்தான்னெனவும் அறியமுடிகிறது ஏறக்குறைய 525 .ஆண்டுகள்தொன்மை வாய்ந்ததும் வரலாற்று சிறப்பு மிக்கதுமான இவ்வாலயம் பலராலும்பாரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது .


இக்கோவிலின் அமைக்கப்பட்டதும் மூலமூர்த்தியாக அமைந்துள்ளவிநாயகபெருமானின் திருவச்சிலை தென் இந்திய சிற்ப வல்லுனர்களால்வடிவமைக்கபட்டு இங்கு எடுத்து வரப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டதென்றுகூறுவார் சிறந்த அருள் பொலிவோடு அமைந்த திருமுகத்தைக் கொண்டஇத்திருவுருவம் இப் பத்தியில் அருள்பார்வை செலுத்துகிறது அக் காலம் தொட்டுகற்பகிரகத்தில் பிரதிஸ் ட்டை செய்த மூல மூர்த்தியை பக்கியோடுமஞ்சணமாட்டி உள்ளன்போடு மக்கள் வழிபட்டனர் மக்களின் அளவற்றபக்க்தியால் மகிழ்ந்த எம்பெருமான் அருள் மாரிபொழிகின்றார் .

இப்பெரும்தலத்தில் ஒரு பெரிய மடம் இருந்தது கோவிலுக்கு வரும் அடியார்கள்இளைப்பாறவும் தமது நேர்த்திக்கான பொங்கல் போன்ற கடமைகளைசெய்யவுமே மடம் அமைந்தது பொது மக்களின் இறைவழிபாட்டிற்கு இந்த மடம்பெரும் பங்காற்றியது 17 .ஆம் நூற்றாண்டின் மத்தியில் யாழ்பாண மண்போத்துகேயரால் கைபர்ரப்பட்டபோது இந்து சமைய கோவில்கள் யாவும் இடித்துசெதமாக்கபட்டன பரராச சேகர பிள்ளையார் கோவிலை இடிக்க வந்தஅணியினருக்கு இவ்வூர்மக்கள் இது கோவிலன்று மடம் என்று கூரியத்தால்கோயில் காப்பாற்றப்பட்டது இப்பொது மாலையில் உள் வீதி உலா வரும் சிறியவிநாயகர் உருவசிலையை மடத்தின் வாசலில் மறைத்து புதைத்து வைத்தனர்கோவிலும் முற்றாக இடிக்கப்படாது காப்பற்றப்பட்டது என முன்னோர் கூறிவந்தனர் .

போத்துகேயர் ,ஒல்லாந்த நாடுகளின் அரசாட்சியின் பின் யாழ்பானத்தைஅரசாண்ட ஆங்கிலேயரின் காலத்தில் சமைய அழிப்பு கடினமாககையாளப்பட்டதால் இவ்வூரின் சமைய வழிபாடும் நெறி முறையும் சுடர் விட்டுப்பிரகாசிக்க தொடங்கின .

பெரிய சந்நியாசியார் அவதரித்துச் சமைய மரபு பேணியதால் இணுவில்கந்தசுவாமி கோவில் காரைக்கால் சிவன் கோவில் ஆகியன அன்னியர்ஆட்சியின்

Keine Kommentare:

Kommentar veröffentlichen